வரலாறு
தகடூர் என்ற பெயரிலே தர்மம் செழித்த பூமி தர்மபுரி. இது அந்த காலத்து அதியமான் அரசாண்ட காலத்து உண்மை. தமிழகம் பொற்கால ஆட்சி கண்ட தமிழக முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்திலேயே தமிழகத்தின் வடபகுதி தருமபுரி மாவட்டம் வளர்ச்சி காணவேண்டும் என்று கனவோடு இதனை ஒரு தனி மாவட்டமாக்கினார். ஆனால் இன்றளவும் பெரிதும் எதுவும் கண்டிராத பூமி என்று பரவலாக பேசப்படுவது இந்த காலத்து உண்மை
தருமபுரி மாவட்ட மண்ணில் திருச்சபையின் வரலாறு ஏற்ககுறைய 1650-ஆம் ஆண்டளவில் ஆரம்பித்திருக்கிறது. முதலில் இப்பகுதிக்கு வந்தவர்கள் மைசூர் மறைப்பணித்தளத்தைச் சேர்ந்த இயேசு சபையினர். பிறகு இப்பகுதியில் மறைப்பணி செய்யும் பொறுப்பு பாரீஸ் மறைப்பரப்பு சபையிடம் அளிக்கப்பட்டது. புதுவையை மையமாகக் கொண்டு 1930-ஆம் ஆண்டு வரை தருமபுரிப் பகுதியில் பாரீஸ் மறைபரப்பு சபையினர் உழைத்தனர். 1930-ஆம் ஆண்டில் தான் சேலம் மறைமாவட்டம் உருவானது. தருமபுரியை தவைநகராக கொண்டு பாப்பரசர் இரண்டாம் ஜான்பால் புதிய மறைமாவட்டத்தை உதயமாக்கி சலேசிய குருவான அருட்திரு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களை ஆயராக 28.02.1997 அன்று நியமனம் செய்தார். 15 ஆண்டுகள் சிறப்பாக ஆயர் பணி செய்து 20.02.2012 அன்று பணி ஓய்வுப் பெற்றார். 20.02.2012 அன்று மேதகு ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் தருமபுரி மறைவாட்டத்தின் இரண்டாவது ஆயராக பணிபெறுப்பெற்றார்.
ஆயர் ஜோசப் அந்தோணி இருதயராஜ், SDB | மேதகு ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், DD |
வளர்ச்சிப் பணிகள்:
இரத்தம் சிந்திய மறைசாட்சியான புனித அருளானந்தர் மற்றும் சான்றோர்கள் விதைத்த விசுவாச விதை மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தது. தருமபுரி சேலம் மறைமாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஆரம்ப நிலைகளில் மேதகு ஹென்றி புரூனியர் அவர்களால் மேலும் நான்கு பங்குகளை கண்டது. மேதகு செல்வநாதர் இன்றும் ஏழு பங்குகளை உருவாக்கினார். தருமபுரி மறைமாவட்டம் உதயமாக காரணமாக இருந்த மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள் இன்னும் 7 பங்குகளை உருவாக்கி மறைமாவட்ட பணித்தளங்களை விரிவுபடுத்தினார். 22 பணித்தளங்களை கொண்ட தருமபுரி மறைமாவட்டத்தை பாப்பரசர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் ஆசிரோடு ஆயர் ஜோசப் அந்தோணி இருதயராஜ் இன்னும் 10 புதிய பணித்தளங்களை உருவாக்கி 32 பணித்தளங்களாக உருவாக்கினார். பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர் அவர்களின் ஆசிரோடு மேதகு ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் தருமபுரி மறைவாட்டத்தின் இரண்டாவது ஆயராக பணிபெறுப்பெற்றார்.