பேராலயம்

பேராலயப் பங்கின் வரலாறு

தருமபுரி பகுதியில் முதலில் மறைப்பணி செய்து, கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்தியவர்கள் மைசூர் மறைப்பணித்தளத்தை சேர்ந்த இயேசு சபைக் குருக்கள். இவர்கள் 1660 ஆம் ஆண்டளவில் தருமபுரிக்கு வந்த போது மூன்று கிறிஸ்தவர்கள் சந்தித்தனர். இவர்கள் மதுரை மறைப் பணித்தளத்திலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும் என்பது வராலறு. 1666ல் பதினாறு பேர். தந்தை இமாவோ மார்ட்டீன் அடிகளாரின் முயற்சியால் திருமறையில் இணைந்தனர். பின்னர் தருமபுரியில் புனித சூசையப்பரின் பெயரால் ஆலயம் எழுப்பப்பட்டது. 1674ல் தந்தை ஜோசப் முசியாரல்லி தருமபுரியில் தங்கி பணியாற்றிய பொழுது. புனித அருளானந்தா் தருமபுரிக்கு வந்து சில நாட்கள் தங்கிச் சென்றார்.

1682ல் மராத்தியர்கள் படை வந்து. தருமபுரியில் இருந்த ஆலயத்தையும். குருவானவர் இல்லத்தையும் இடித்து ஏலங்கூறிவிட்டார். பின்னர் 1700ல் கோவிலூரில் குருக்கள் தங்கி பணியாற்றினர்.

1895 முதல் கடகத்தூர் பங்கு குருவின் கண்காணிப்பில் தருமபுரி இருந்து. 1900-1910 வரை கோவிலூரில் கீழ் இருந்து 1910 முதல் மீண்டும் கடகத்தூரோடு இணைக்கப்பட்டது. 1918ல் கடகத்தூர் பங்கு குருவாக இருந்த அருட்திரு ஸ்தனிஸ்லாஸ் தருமபுரியில் ஒரு சிறு கோவிலை கட்ட ஆரம்பித்தார். அச்சமயத்தில் துணை நீதிபதியாக இருந்த திரு. சாமிநாதப்பிள்ளை இந்துக்கள் மற்றும் முகமதியரிடமிருந்து ரூ 400 சேர்ந்து ஆலயம் எழுப்பும் பணிக்கு உதவினார். 1922ல் இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டது.

புறவழிச் சாலையில் 1962ல் மறைதிரு டி.சி. ஜோசப் குருக்கள் தங்குமிடம் கட்டினார். அக்கட்டிடததில் 1965ல் அமலா ஆங்கிலப் பள்ளி செயல்பட ஆரம்பித்தது. பின்னர் விமலபுரில் கன்னியர் இல்லமும். பள்ளியும் கட்டி முடிக்கப்பட்டது.

1968ல் தருமபுரி புதிய பங்காக உருவாக்கப்பட்டது. தந்தை குருவில்லா தாமஸ் முதல் பங்கு தந்தையானார். 1972ல் தந்தை குருவில்லா தாமஸ் புதிய ஆலயம் (இன்றைய ஆலயம்) எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டு பணியை ஆரம்பித்தார்.1976ல் தந்தை சிறய ஐசக் அடிகளார் ஆலயத்தை கட்டி முடித்து புனிதப்படுத்தினார். தருமபுரியின் கிளைப் பங்காக இருந்த யேசுராஜபுரம். பிலிகுண்டுடன் இணைந்து 1979 முதல் தனிப்பங்காக உருவானது. எலத்தகிரியின் துணைப் பங்காக இருந்த நெல்லிமரத்துப்ப்டி. பீனாச்சிட்டி ஆகியவை இன்றைய தருமபுரியின் கிளைப் பங்குகளாகும்

 

 

 
^ மேல் நோக்கி செல்